திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு நேற்று ஏர்ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த மலேசியாவை சேர்ந்த முகமது இலியாஸ்(36) என்ற பயணியிடம் 660 கிராம் எடையுள்ள 6 தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.20.27 லட்சம் என கூறப்படுகிறது. மற்றொரு பயணியிடம் இருந்து ரூ.10.74லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
