சங்க ஆலோசனைக் கூட்டம்

 

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு விடுதிப்பணியாளர் சங்கம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகள் மற்றும் துறை சங்கங்களின்ஆலோசனை, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்கள் கோபால், முனீஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட ஆலோசகர் ராசு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் நவநீதகிருஷ்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் மாரி, அனைத்து அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச்செயலர் பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று நோக்கவுரையாற்றினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சமையலர்கள், காவலர்கள் நிலையில் பணிமூப்பு அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, சங்கத்துக்கு புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத்துணைத் தலைவர் இளையராஜா, மாவட்ட பொருளர் சிவப்பிரகாசம், மகளிர் குழு பொறுப்பாளர் ராமாயி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாவட்ட பொருளாளர் மாதவன் நன்றி கூறினார்.

The post சங்க ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: