கோவையில் முதற்கட்டமாக நடந்த தமிழ்நாடு வேளாண் பல்கலை கலந்தாய்வில் 3,530 இடம் நிரம்பின

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு 6,980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 18 உறுப்பு கல்லூரிகளில் 2,567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4,413 இடங்களும் உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20 வரை பெறப்பட்டது. 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில், கடந்த 5ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மூலம் 3,530 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,159 இடங்கள் காலியாக உள்ளன. தேர்வானவர்கள் கல்லூரியில் வரும் 21ம் தேதிக்குள் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் காலியிடங்கள் கணக்கிடப்பட்டு 2ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஜனவரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்….

The post கோவையில் முதற்கட்டமாக நடந்த தமிழ்நாடு வேளாண் பல்கலை கலந்தாய்வில் 3,530 இடம் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: