கோயில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி, ஜூன் 30:கடலாடி அருகே கிடாக்குளம் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் சின்ன மாடு மற்றும் இரண்டு பிரிவுகளாக பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் நடைபெற்ற சின்னமாடு வண்டி போட்டியில் வெள்ளியங்குன்றம் பாலா, கிடாக்குளம் சேதுகோடாங்கியின் மாடுகள் முதலிடமும், சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் இரண்டாம் இடமும், வைப்பார் மணிக்கலா, செக்கராத்தே வெற்றிமாறன் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது.

பூச்சிட்டு பந்தய போட்டியின் முதல் சுற்றில் மேலச்செல்வனூர் வீரகுடி முருகய்யனார் மாடுகள் முதல் இடத்தையும், சாயல்குடி சிங்கத்தமிழன் மாடுகள் இரண்டாம் இடத்தையும், ஆப்பனூர் மகமாயி அம்மன், ஆத்திகிணறு முத்துவேல் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது.

இரண்டாவது சுற்றில் வெள்ளியங்குன்றம் பாலா, கிடாக்குளம் சேதுகோடாங்கியின் மாடுகள் முதலிடமும், ஏ.பாடுவனேந்தல் சேமுத்து, உதயம் துரைப்பாண்டியன் மாடுகள் இரண்டாமிடத்தையும், சாத்தங்குடி உத்தமநாதவேல் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றது. வெற்றிப்பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசாக பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

The post கோயில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: