கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவர் வாரியார் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

மலப்புரம்: பிரபல கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை மருத்துவர் பி.கே. வாரியார் நேற்று காலமானார். அவருக்கு வயது 100. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை ஆயுர்வேத மருத்துவத்துக்கு மிகவும் பிரபலமானது. இங்கு தரன் நம்பூதிரி, பன்னியம்பிள்ளி குன்னி வாரியாருக்கு மகனாக 1921ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பன்னியம்பிள்ளி  கிருஷ்ணன் குட்டி வாரியார் (பி.கே. வாரியார்) பிறந்தார். இவர் பள்ளிப் படிப்பை முடித்ததும், சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு சென்றார். பின்பு, மருத்துவம் பயின்றார். பின்னர், பிஎஸ். வாரியாரின் கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் சேர்ந்தார். அதன் நிர்வாக அறங்காவலராக 70 ஆண்டுகளாக இருந்தார். இவரது மருத்துவ சேவையை பாராட்டி 1999ல் பத்ம , 2010ல் பத்ம பூஷண் விருதுகளை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்தது. இத்தகைய புகழுக்குரிய இவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். …

The post கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவர் வாரியார் மரணம்: பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: