கொள்ளிடத்தில் காற்றால் முறிந்து விழும் மரங்கள்

 

கொள்ளிடம், மே 31: கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக காற்று பலமாக வீசிவருவதால் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வீசும் காற்றால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சற்று சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். தொடர்ந்து காற்று பலமாக வீசி வருவதால் மின் கம்பிகளும் அருந்து விழும் நிலை இருந்து வருகிறது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சற்று முன்னதாகவே துவங்கி பெய்து கொண்டிருப்பதால் காற்றும் பலமாக கடலோர கிராமங்களை நோக்கி வீசி வருகிறது.

The post கொள்ளிடத்தில் காற்றால் முறிந்து விழும் மரங்கள் appeared first on Dinakaran.

Related Stories: