கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு 58 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க ₹58 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்,  களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான  1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ₹5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 58 கோடியே 59 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறை பணியாளர்கள், தலா 5 ஆயிரம் ஊக்கத் தொகை பெறுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு 58 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: