கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு!!

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700க்கும் கீழ் குறைந்து காணப்படுகிறது. தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தியதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை உயர்வது தடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் குஜராத், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை.தமிழகத்தில் ஒமிக்ரான் பரவுவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நாளை மறுநாளுடன் (15ம் தேதி) முடிவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிப்பது மற்றும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது….

The post கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: