கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்த வருடம் 5 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு நேற்று (29ம் தேதி) முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு கேரளாவில் 2017 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியது. இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் கேரளாவில் கோடைமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்து உள்ளது. கடந்த மார்ச் 1 முதல் மே 28 வரை 98 சதவீதம் கூடுதலாக கோடை மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் மழையின் தீவிரம் சற்று குறைவாக இருந்தாலும், ஜூன் 2வது வாரத்திற்கு பிறகு மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது….

The post கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: