விருதுநகர், ஆக.3: விருதுநகரில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க கிளைத்தலைவர் விஜயலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை ஆய்வாளரில் இருந்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் பதவி உயர்வு பணி ஒதுக்கீடு பட்டியலில் முதுநிலை பின்பற்றாததை கண்டித்தும், பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜான்சி உள்பட பலர் பங்கேற்றனர்.
The post கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
