குழந்தைகள் வளர்ச்சிக்கு “நியூட்ரிக் கேர்” செயலி: கலெக்டர் துவக்கிவைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள தனியார் அரங்கத்தில் ஐஆர்சிடிஎஸ் மற்றும் சில்ரன் பிலீவ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில், ஊட்டச்சத்து மற்றும் முன்பருவ வளர்ச்சிக்காக தயார் செய்யப்பட்ட “நியூட்ரிக் கேர்” செல்லிட பேசி செயலி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த செயலி குறித்து ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக செயலாளர் ஸ்டீபன் விளக்கி கூறினார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் முன் பருவ வளர்ச்சிக்கான நியூட்ரி கேர் செல்லிடப்பேசி செயலியை துவக்கிவைத்து அது தொடர்பான குறும்படத்தையும் பார்வையிட்டார்.`தாய், சேய் நலம் பராமரிப்புகள் குறித்து தாய்மார்களுக்கும் தந்தையர்கள், பயிற்றுநர்கள், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நியூட்ரி கேர் என்ற செல்லிட பேசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கர்ப்பகாலத்தில் பருவம் வாரியாக போட வேண்டிய தடுப்பூசிகள், சுகாதாரம் சம்பந்தமான தகவல்கள், குழந்தைகள் பேணுதல், ஊட்டச்சத்து அடங்கிய பொருள்கள், உணவுகள், வளர்ச்சி படிகள் மற்றும் குறியீடுகள் என விடியோ அடங்கியுள்ளது. அதை பார்த்து அறிந்து கொள்ளலாம்’ என்று கலெக்டர் கூறினார்.நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் லலிதா சுதாகர், சில்ரன் பீலிவ் நிறுவனத்தின் இயக்குநர் நான்சி அனாபெல், பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் பாலமணிகண்டன், வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்….

The post குழந்தைகள் வளர்ச்சிக்கு “நியூட்ரிக் கேர்” செயலி: கலெக்டர் துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: