கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு தேட்டமுலா பகுதியில் தனியார் நிலத்தில் சாலையோரமாக சுற்றுச்சுவர் அற்ற கிணறு ஒன்று உள்ளது. பாதுகாப்பற்ற இக்கிணறு பொது மக்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சுமார் 30 அடி விட்டமும் 40 அடி ஆழமுமுள்ள இக்கிணறு அமைந்துள்ள பகுதியில் தெருவிளக்கும் இல்லாத நிலையில் இரவில் இவ்வழித்தடத்தில் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
