குடவாசலில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

வலங்கைமான், ஜூலை 30: குடவாசலில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் மாலை நேரத்தில் தொடக்க நிலை மாணவர்களுக்கான வகுப்பில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் எவ்வாறு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுவது என்பது பற்றிய தகவல்களை கருத்தாளர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 2.0 பயிற்சி குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை குடவாசல் வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வை யாளர் பூபாலன் இப்பயிற்சியின் நோக்கம் குறித்து தன்னார்வலர் களுக்கு எடுத்துரைத்தார்கள். இப் பயிற்சியின் கருத்தாளர்களாக இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் காத்தமுத்து, கவிதா தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கினர். இப்பயிற்சியில் 160 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் பங்கு பெற்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் வழியாக சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும கணிதம் கட்டகங்கள் வழங்கப்பட்டது.2024 25ம் கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட இத்தன்னார்வலர்கள் மாலை நேரத்தில் தொடக்க நிலை மாணவர்களுக்கான வகுப்பில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் எவ்வாறு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுவது என்பது பற்றிய தகவல்களை கருத்தாளர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

The post குடவாசலில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: