கிராமங்களுக்கு உடனுக்குடன் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம்

ராமநாதபுரம், ஜூன் 7: முதுகுளத்தூர் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளத்தில் நேற்று நடந்த அய்யனார் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை மற்றும் கதர், கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறும்போது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய 3 யூனியன்களில் கிராமங்களுக்கு தேவையான குடிநீர், சாலை, பஸ் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய தேவைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததும் உடனடியாக அரசு சார்பில் நிறைவேற்றிக் கொடுக்கப்படுகிறது.

இதனால் 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாறும். மேலும் ஏனாதி பூங்குளம் கிராம பகுதிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, ரூ.45 லட்சம் மதிப்பில் மண்டபம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்ய திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது, விரைவில் பணிகள் துவங்கும், என்றார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகவேல், ஜெயபால், பூபதிமணி, சண்முகநாதன், குலாம்முகைதீன், கோவிந்தராஜன், முன்னாள் மாணவரணி அமைப்பாளர் போகர் துரைசிங்கம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் செல்லப்பாண்டி, முத்துராமலிங்கம், வடமலை, ரவிந்தீரநாதன், ராஜேந்திரன், பாரதிராஜா, ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேஷ்பாண்டி, அமைச்சர் உதவியாளர்கள் கண்ணன், சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கிராமங்களுக்கு உடனுக்குடன் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: