காவல்துறையினருக்கு பேரிடர் கால பயிற்சி

 

அரியலூர், ஆக. 7: காவல்துறையினருக்கு பேரிடர் கால் பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல்துறையினருக்கு பேரிடர் கால பயிற்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் வழிகாட்டுதலின் படியும் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கியது.

இதில் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், காவல்துறையினர் அதை எதிர்க்க உள்ள தயாராக இருக்க வேண்டும். என்பது குறித்து பயிற்சி வகுப்பை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது உடன் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் இளங்கிள்ளிவளவன், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உலகநாதன் உடன் இருந்தனர்.

The post காவல்துறையினருக்கு பேரிடர் கால பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: