சென்னை: சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் நித்யா (21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, இவரிடம் சேலையூரை சேர்ந்த ஹேமந்த்குமார் (24), நண்பராக பழகி வந்துள்ளார். நாளடைவில் ஹேமந்த்குமார், இவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நித்யா, அங்கிருந்து தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்திற்கு மாறி வேலை செய்து வந்துள்ளார். ஆனாலும், செல்போன் மூலம், வேலைக்கு செல்லும் வழியில் ஹேமந்த்குமார், தன்னை காதலிக்க சொல்லி நித்யாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு நித்யா, என்னை பின் தொடர வேண்டாம், நான் உன்னை காதலிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேம்நாத்குமார் கடந்த 29.05.2015ம் ஆண்டு, காலை 8.45 மணிக்கு நித்யா வேலைக்கு செல்லும்போது, வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் நித்தியாவின் வயிறு, கை மற்றும் உடலின் பல பாகங்களில் குத்திவிட்டு தப்பினார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹேமந்த்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி, கொலை முயற்சி வழக்கில் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். ஆனால் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை வெறியோடு மிகவும் ஆழமாக, பல இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் காயத்தின் அகலம், ஆழம், பாதிப்பு எல்லாம் அதிகமாக உள்ளது எனவே அதிகபட்ச தண்டனையாக வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, வாலிபருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்….
The post காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து வாலிபருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.