காதலனுடன் எஸ்சான மனைவியால் கடற்படைக்கு ரூ.1 கோடி இழப்பு

திருமலை: காதலனுடன் ஓடிய மனைவி கடலில் மூழ்கி விட்டதாக கணவன் அளித்த தவறான தகவலால் ஹெலிகாப்டர், கப்பல்களில் தேடப்பட்டதால் கடற்படைக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சாய் பிரியா (21). கடந்த 25ம் தேதி 2ம் ஆண்டு திருமண நாளை கொண்டாட விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர். அப்போது, சாய்பிரியா கணவரை ஏமாற்றிவிட்டு, தனது பழைய காதலன் ரவியுடன் ரயிலில் பெங்களூரு தப்பினார். மனைவி திடீரென காணாமல் போனதால் அதிர்ந்த சீனிவாஸ், செல்பி எடுக்கும்போது கடல் மூழ்கி விட்டதாக தெரிவித்தார். உடனே, கடற்படையினர் ஒரு ஹெலிகாப்டர், 2 கப்பல்கள் மூலமாக கடலில் தேடினர். 2 நாட்களாகியும் சாய்பிரியா கிடைக்கவில்லை. இந்த தேடுதலுக்காக கடற்படைக்கு ரூ.1 கோடி செலவானது.இந்நிலையில், தனது தந்தைக்கு ஆடியோ மெசஜ் அனுப்பிய சாய்பிரியா, ‘நான் காதலித்து வந்த ரவியுடன் வந்து விட்டேன். எங்களுக்கு திருமணம் கூட ஆகிவிட்டது’ என கூறியிருந்தார். இந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடியபோது, சாய்பிரியாவும் ரவி பெங்களூருவில் இருப்பது தெரிந்தது. அவர்களை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே நேரம், ‘சாய்பிரியாவை கடலில் தேடுவதற்கு ஹெலிகாப்டர், 2 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதால் 1 கோடி செலவாகி உள்ளது. தவறான தகவல் கொடுத்து கடற்படையின் நேரம், பணத்தை வீணாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போலீஸ் கமிஷனருக்கு கடற்படை கடிதம் எழுதியுள்ளது….

The post காதலனுடன் எஸ்சான மனைவியால் கடற்படைக்கு ரூ.1 கோடி இழப்பு appeared first on Dinakaran.

Related Stories: