காங்கிரசார் கொண்டாட்டம்

சேலம்: தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாநில தலைவராக செல்வபெருந்தகை எம்எல்ஏ நியமிக்கப்பட்டதை வரவேற்று, சேலம் மாநகர் மாவட்ட காங்கிரசார் கொண்டாடினர். முள்ளுவாடிகேட் அருகேயுள்ள கட்சி அலுவலகம் முன் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் திரண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட பொருளாளர் தாரை ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரபு, திருமுருகன், ஷாநவாஸ், விவசாய பிரிவு தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார்அகமது, ராமன், நாகராஜ், நிர்வாகிகள் மோகன்ராஜ், விஜயராஜ், கோவிந்தன், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post காங்கிரசார் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: