கவிதாஸ் கல்லூரியில் கருத்தரங்கம்

திருச்செங்கோடு, செப்.17: திருச்செங்கோடு அருகே வையப்பமலை கவிதாஸ் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. வையப்பமலை கவிதாஸ் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை செந்தமிழ் மன்றம் சார்பில் பாரம்பரிய திருவிழா மற்றும் ஐம்பொறி ஆட்சி கொள் என்னும் தலைப்பில் ஒருநாள் தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முளைப்பாரி எடுத்தல், பூங்கரகம், சிலம்பாட்டம், வள்ளி கும்மி, திருப்புகழ் பாடுதல், தப்பாட்டத்துடன் தொடங்கப்பட்டது.

விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் சதிஸ்குமார் வரவேற்றார். கல்லூரி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசுகையில், நம் பாரம்பரியம் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அதற்கு தமிழ்த்துறை மாணவர்களும் ஆசிரியார்களும் பாடுபட வேண்டும் என்றார். கல்லூரி செயலாளர் கவிதாசெந்திகுமார், முதல்வர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் தனபால் கலந்து கொண்டு ‘’ஐம்பொறி ஆட்சி கொள்’’ என்னும் தலைப்பில் பேசினார். தமிழ்த் துறை பேராசிரியார் சிவகுமார் நன்றி கூறினார். இவ்விழாவினை முதுகலைத் தமிழ்2ம் ஆண்டு மாணவர் திருமலைப்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

The post கவிதாஸ் கல்லூரியில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: