மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் டேமங்லாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கனமழையால் மணிப்பூரின் பல பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை கோஹிமா - திமாபூர் சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
