கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா: 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

தியாகதுருகம்: தியாகதுருகத்தில்  சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.  வசந்தன் கார்த்திகேயன் தேரை வடம் பிடித்தார். இந்நிகழச்சிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  தியாகதுருகம் அடுத்த  சித்தலூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில்  திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சித்தலூர் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவிழா  வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவை காண தியாகதுருகம்  சுற்றியுள்ள சுமார் 50 கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து  சுமார். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து அம்மன்னை வழிபட்டனர்.மார்ச் 1ஆம் தேதி சிவராத்திரி இரவு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. இதனை அடுத்து புதன்கிழமையன்று கோவிலுக்கு அருகே உள்ள மறைமுக ஆற்றங்கரையில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை அம்மனுக்கு பால் தயிர் இளநீர் மஞ்சள் குங்குமத்தால் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் கோவிலைச் சுற்றி வந்து  திருத்தேரில் அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோவிலைச் சுற்றி வந்து பின்னர் நிலையை அடைந்தது. திருவிழாவில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்  தலைமையில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கள் சுப்பராயன், விஜய் கார்த்திக் மேற்பார்வையில்  தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்….

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா: 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: