வைகோ மீது வழக்கு; கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தில் வைகோ மீது வழக்கு பதிவு செய்ய  போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலைய துவக்க விழாவிற்கு வந்த பிரணாப் முகர்ஜிக்கு வைகோ உள்ளிட்டோர் கருப்புக்கொடி காட்டிய வழக்கு விசாரணை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கடந்த 6ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி  வந்தார்.

அப்போது சில வக்கீல்கள் அவரை அவதூறாக பேசியதால் அவருடன் வந்த மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் ஆத்திரமடைந்து அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில் ஜெகதீஷ்ராம் என்ற வக்கீல் காயமடைந்தார். இதுகுறித்து வக்கீல் ஜெகதீஷ்ராம் மனுவை விசாரித்த தூத்துக்குடி முதலாவது மாஜிஸ்திரேட்,  வைகோ உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தென்பாகம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: