கலெக்டர் வழங்கினார் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி கனவு 2023 உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம்ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஜெயங்கொண்டம் தெற்கு பள்ளியிலும்கல்லூரி கனவு 2023 உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குமு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஒரு பள்ளிக்கு 11 பேர் வீதம் கலந்து கொண்டனர். பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையேற்று துவக்கி வைத்தார்.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம விரிவுரையாளர் முனைவர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மீராதேவி பிளாரன்ஸ் இஸபெல்லா , கருத்தாளர்களாக பயிற்சி வழங்கினர்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா , முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜ பிரியன், உதவிதிட்ட அலுவலர் பன்னீர்செல்வம் ,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எழில்வளவன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் ,வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் செய்திருந்தார். தா. பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பயிற்சியினைஉதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையேற்று பயிற்சியினை துவக்கி வைத்தார். கருத்தாளர்களாக அரசினர் கலைக் கல்லூரி விரிவுரையாளர் மேரி வயலட் கிறிஸ்டி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசைத்தம்பி, கார்த்திகேயன், அகிலா ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியின் முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா நன்றி கூறினார்.

The post கலெக்டர் வழங்கினார் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி கனவு 2023 உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: