நாகர்கோவில், ஏப்.10: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு எந்திரங்களில் பொருத்தப்படுகின்ற வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் அடங்கிய ‘பேலட் பேப்பர்’ சென்னையில் மத்திய அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டது.பின்னர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலத்திலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு குழித்துறையில் உள்ள கருவூலத்திலும் பேலட் பேப்பர்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இவற்றை கருவூலத்தில் இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இவை அந்தந்த தொகுதிகளின் மின்னணு இயந்திரங்கள் இருக்கும் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பர் மின்னணு இயந்திரத்தில் பொருத்தும் பணி இன்று (10ம் தேதி) தொடங்குகிறது. இதற்காக பெல் நிறுவன குழுவினரும் குமரி மாவட்டம் வருகை தந்துள்ளனர். மேலும் விவி பேட்களில் காகிதங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
The post கன்னியாகுமரி, விளவங்கோடு தேர்தல்கள் மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று நடக்கிறது appeared first on Dinakaran.