கந்தர்வகோட்டை மே 31: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கிராமப்புற மக்கள் தங்களது குழந்தைகளை 2025-26ம் கல்வி அண்டுக்கு பள்ளிக்கு அனுப்ப தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் வரும் 2ம் தேதி அனைத்து பள்ளிகளும் அறிவித்தபடி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், பள்ளிகளில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேல்நிலை முதலாம் வகுப்பில் சேர்க்கவும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரியில் சேர்க்க ஆன்லைன் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
The post கந்தர்வகோட்டையில் மாணவ -மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப முன்னேற்பாடு பணிகள் appeared first on Dinakaran.
