கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பிற நலவாரிய தொழிலாளர்களும் குவிந்ததால் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமான நலவாரிய தொழிலாளர்களுகு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில், முறையான அறிவிப்பு இல்லாததால், அனைத்து நலவாரிய உறுப்பினர்களும் குவிந்தனர். மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ரூபாய் இல்லாமல், வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக தகவல் வெளியானது. ஆனால், இதை முறையாக அறிவிக்காததால், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நல வாரிய உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் குவிந்தனர். மற்ற நலவாரிய தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இதை அறியாமல் மழையையும் பொருட்படுத்தால், அனைவரும் குவிந்தனர். இதனால், பலர் பொங்கல் தொகுப்பு பெறாமல் திரும்பினர்.  இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது, ‘கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது; மற்ற நலவாரியத்தில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை’ என்றார். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்திருந்த நலவாரிய உறுப்பினர்கள் சமூக இடைவெளி இல்லாமலும், பலர் மாஸ்க் அணியாமலும் நின்றிருந்தனர். அவர்களுக்கு பொருட்கள் வழங்கிய அதிகாரிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை. முறையான அறிவிப்பு இல்லாததால், அனைத்து வாரிய உறுப்பினர்களும் திரண்டதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது….

The post கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பிற நலவாரிய தொழிலாளர்களும் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: