நாகர்கோவில், ஜூன் 10: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஜோகன் ரிஷி என்ற சிறுவன் சில மாதங்கள் முன்பு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். பாத்திமா என்ற பெண் நகைக்காக அந்த சிறுவனை கடத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் பத்மநாபபுரம் கூடுதல் அமர் நீதிமன்றம் பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் அவரது கணவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. இந்த கொலை ஆனது ஒரு கொடூர கொலை ஆகும். இந்த கொலை அரிதிலும் அரிதான ஒரு கொலை வழக்காகும். இப்படிப்பட்ட கொலைகளுக்கு அதிகபட்சமாக வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே குமரி மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு கொலையாளி பாத்திமாவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை கிடைத்திட இந்த வழக்கை மாவட்ட நிர்வாகம் அரசு தரப்பு மேல் முறையீடு செய்ய ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post கடியப்பட்டணம் சிறுவன் கொலை வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும் லெனினிஸ்ட் கலெக்டரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.
