தொண்டி, ஏப்.18: தொண்டி அருகே கடலில் கரை ஒதுங்கிய போயாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடலில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகவும், வலைகள் விரித்துள்ள இடத்தை அறிந்து கொள்வதற்காகவும் சிறிய வகை போயா எனப்படும் மிதவைகளை பயன்படுத்துவது வழக்கம். இதேபோல் சர்வதேச கடல் எல்லைகளை கண்டு கொள்வதற்காகவும் பெரிய வகை போயாவை பயன்படுத்துகின்றனர். இந்த வகையான போயா ஒன்று நேற்று தொண்டி அருகே உள்ள புதுக்குடி கடல் பகுதியில் மிதந்துள்ளது. மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post கடலில் கரை ஒதுங்கிய போயா appeared first on Dinakaran.
