கடந்த 50 ஆண்டுகளாக தடைபட்டிருந்த ‘சர்யு நகர்’ திட்டத்திற்கு பாஜக அரசு புத்துயிர் அளித்துள்ளது: பிரதமர் மோடி

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் சரபு நஹர் தேசியத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; கடந்த 50 ஆண்டுகளாக தடைபட்டிருந்த ‘சர்யு நகர்’ திட்டத்திற்கு பாஜக அரசு புத்துயிர் அளித்துள்ளது. கேப்டன் வருண்சிங் விரைந்து குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது. இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம் மிகப்பெரிய இழப்பு. தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்தாலும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேசத்திற்காகவும், ராணுவ வீரர்களுக்காகவும் பிபின் ராவத் பணியாற்றினார். வரும் நாட்களில் இந்தியா முன்னேறி செல்வதை பிபின் ராவத் காண்பார். எத்தனை வலிகள் இருந்தாலும் நமது வேகமும், வளர்ச்சியும் ஒருபோதும் பாதிக்காது. குரூப் கேப்டன் வருண் சிங்கின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் கடினமாக பணியாற்றுகின்றனர். வருண் சிங்கின் குடும்பத்துடன் தேசம் துணை நிற்கும். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கதாநாயகர்களின் குடும்பத்தோடு தேசம் துணை நிற்கிறது. நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வோம். இந்தியாவை இன்னும் சக்திவாய்ந்த நாடாகவும், மேலும் வளமானதாகவும் மாற்றுவோம் இவ்வாறு கூறினார். …

The post கடந்த 50 ஆண்டுகளாக தடைபட்டிருந்த ‘சர்யு நகர்’ திட்டத்திற்கு பாஜக அரசு புத்துயிர் அளித்துள்ளது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: