திருவாரூர், ஜூன் 30: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையினையொட்டி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதற்காக பாகம் வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு பயிற்சி முகாம் மாநிலம் முழுவதும் இருந்து வரும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்துவதற்கு திமுகவின் தலைவரும் முதல் வருமான மு. க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பயிற்சி முகாமானது நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி டிஜிட்டல் முவர்களுக்கான பயிற்சி முகாம் திருவாரூர் மன்னார்குடி சாலையில் இருந்து வரும் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று கட்சியின் மாவட்ட செயலாளரும் எம் எல் ஏ வுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.இதில்ஒன்றிய செயலாளர்கள் தேவா, பாலச்சந்தர், கலியபெருமாள், குமரேசன், நகர செயலாளர்கள் பிரகாஷ், பக்கிரிசாமி, பேரூர் கழக செயலாளர் பூண்டி கலைவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ‘‘ஓரணியில் தமிழ்நாடு” திமுக உறுப்பினர் சேர்க்கை வாக்குசாவடி டிஜிட்டல் முகவர் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.
