ஓட்டுக்கு பணம் கொடுக்க பெரிய குளத்தில் ‘பால்’ செம்பில் சத்தியம்: வேட்பாளர்களை விரட்டிய பெண்கள்

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், 10 ஆண்டுகளாக போடி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ், தனது தொகுதி மக்களுக்கோ, மாவட்டத்திற்கோ எதுவும் செய்யாததால், ஓட்டு கேட்டுச் செல்லும்போது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், நான்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ.500 வரை கொடுத்து ஓட்டு வருகின்றனர். போடி தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் மற்ற தொகுதிகளில் தலா ரூ.500ம் அதிமுகவினர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரியகுளத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது, ஒரு செம்பில் பாலை வைத்துக்கொண்டு, அதிமுகவிற்குதான் வாக்களிப்போம் என பாலில் சத்தியம் செய்யச் சொன்னார்களாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் உடன்படாமல், ‘‘நீங்கள் கொடுக்கும் லஞ்சப் பணத்திற்காக பாலில் சத்தியம் செய்ய மாட்டோம்’’ என மறுப்பு தெரிவித்து, பணத்தை வாங்காமல் விரட்டி அடித்தார்களாம். இதேபோல போடி தொகுதியில் உள்ள பழனிசெட்டிபட்டி, அரண்மனைப்புதூர் வீரபாண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுகவினர் கொடுத்த பணத்தை பெண் வாக்காளர்கள் பலர் வாங்க மறுத்துள்ளனர்.  …

The post ஓட்டுக்கு பணம் கொடுக்க பெரிய குளத்தில் ‘பால்’ செம்பில் சத்தியம்: வேட்பாளர்களை விரட்டிய பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: