வாலிபருக்கு கத்திக்குத்து

பெரம்பூர்: புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜய் (21). இவரது தங்கை சினேகா அருகில் உள்ள கடைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த 5 பேர், குடிபோதையில் சினேகாவை கிண்டல் செய்துள்ளனர். இதை சினேகா கண்டித்ததால் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த அஜய், உடனே சம்பவ இடத்துக்கு சென்று அந்த 5 பேரிடமும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. போதை ஆசாமிகள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜய் வலது கால், தலை மற்றும் கை ஆகிய இடங்களில் குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த அஜயை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: