ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 52 வயதில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற தொழிலதிபர்: குஜராத்தில் நெகிழ்ச்சி

அகமதாபாத்: ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதற்காக 52 வயதில் நீட் தேர்வில் குஜராத் தொழிலபதிபர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த போடக்தேவ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் குமார் சிங் (52) என்பவர், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர், 720 மதிப்பெண்களுக்கு 607 மதிப்பெண்களை 98.98 சதவீத தேர்ச்சி பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற இலவச பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என் மகன் நீட் தேர்வுக்கு தயாராகும் போது, தனியார் ​​பயிற்சி நிறுவனங்கள்  அதிகக் கட்டணம் வசூலித்ததையும், ஏழை மாணவர்களுக்கு நீட் எட்டாக்கனியாக  இருப்பதை உணர்ந்தேன். அதனால் ​​நாங்கள் இரண்டு ஏழை மாணவர்களை நீட்  தேர்வுக்கு தயாராக்கி வருகிறோம். அவர்களின் பெற்றோர் 100 நாள்  வேலைத்திட்டத்தின் பணியாளர்களாக உள்ளனர்.  நான் 1987ம் ஆண்டில் 12ம் வகுப்பில் 71% மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வணிகப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்  பெற்றேன். எனது மகன் பிஜின் சினேகன்ஷி, தற்போது மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு நீட் தேர்வுக்கான வயது வரம்பை தேசிய தேர்வு முகமை மற்றும் தேசிய மருத்துவ கவுன்சில் தளர்த்தியதால் என்னால் தற்போது வெற்றி பெற முடிந்தது. ஜூலை மாத தேர்வுக்கு பிப்ரவரியில் படிக்க ஆரம்பித்தேன்’ என்றார். …

The post ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 52 வயதில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற தொழிலதிபர்: குஜராத்தில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: