ஏர்வாடியில் 100% அடிப்படை வசதிகள்

கீழக்கரை, ஜூலை 7: கீழக்கரை வட்டம் ஏர்வாடி ஊராட்சியில் நூறு வேலைத்திட்டம், காவிரி குடிநீர் வசதி, அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம், கல்பார் கிராமத்தில் புதிய ரேஷன் கடை, ஏர்வாடியில் சேதமான சாலை புதுப்பித்தல், இலவச வீட்டுமனை பட்டா, மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டதில் பங்கேற்றோரிடம் ஏர்வாடி ஊராட்சி அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்தது. கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முஹமது தலைமை வகித்தார். கடலாடி வட்டார வளர்ச்சி ஆணையர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெய ஆனந்த், இன்ஸ்பெக்டர் கலாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சமரசத்தீர்வு ஏற்பட்டதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

The post ஏர்வாடியில் 100% அடிப்படை வசதிகள் appeared first on Dinakaran.

Related Stories: