ஏரிநீர்வரத்து கால்வாயை தூர் வாரி கான்கிரீட் கால்வாய் அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

மதுராந்தகம், ஜன.30: கள்ளபிரான்புரம் ஊராட்சியில் ஏரிநீர் வரத்து கால்வாயை தூர் வாரி கான்கிரீட் கல்வாயாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் கள்ளபிரான்புரம் ஊராட்சியில் ஏரிநீர் வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு அந்தப் பகுதியில் உள்ள 150 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் கால்வாய் வழியாக ஏரியை சென்றடையும். இதனால், அந்த ஏரிக்கு நீர் ஆதாரமாக இக்கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் அருகில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் உள்ளது. இந்நிலையில், இந்த கால்வாய் தூர்ந்து போய் உள்ளதால் மழைக்காலங்களில் செல்லும் மழைநீர் அருகில் உள்ள பள்ளி மற்றும் அரசு கட்டிடங்களை சூழ்கிறது. இதனால், அந்த பகுதி சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த கால்வாயை தூர்வாரி கான்கிரீட் போட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஏரிநீர்வரத்து கால்வாயை தூர் வாரி கான்கிரீட் கால்வாய் அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: