ஏசியில் திடீர் மின்கசிவு காரணமாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிபத்து: 5 பேர் பத்திரமாக மீட்பு

சென்னை: ஏசியில் மின்கசிவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு 5 பேரை பத்திரமாக மீட்டனர்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொது பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, கொரோனா பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இங்கு, புறநோயாளிகளாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். நோயின் தன்மைக்கு ஏற்ப பல பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கொரோனா வார்டில் உள்ள ஏசி இயந்திரத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்தது. இந்த அறையில் 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள், தீ விபத்து ஏற்பட்டதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக மருத்துவமனையில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரையும் உடனடியாக வேறு அறைக்கு மாற்றினர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post ஏசியில் திடீர் மின்கசிவு காரணமாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிபத்து: 5 பேர் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: