நாகர்கோவில், மே 25 : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முயற்சியால் வெற்றிப்பாதை என்னும் தலைப்பில் உதவி காவல் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 3 முறை நடந்த இந்த மாதிரி தேர்வில் உதவி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பித்து இருந்த பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 4வது பயிற்சி தேர்வு இன்று (25ம் தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படையில் உள்ள மைதானத்தில் மாநில அளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கியூஆர் கோடு மூலம் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஆஜராக வேண்டும். தேர்வில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு குமரி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post எஸ்ஐ பணிக்கு 4வது இலவச பயிற்சி தேர்வு நாகர்கோவிலில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.
