ஊரடங்கு அச்சத்தால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவது சிறு,குறு தொழிற்சாலைகளை கடுமையாக பாதிக்கும்: கொரோனா அதிகரிப்பால் மீண்டும் சிக்கல்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு வரும் என்ற பயத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேறினால் சிறு, குறு தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் வேகம் எடுத்து வருகிறது. இதில் தினமும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவது மகாராஷ்டிரா மாநிலம்தான். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் ஊரடங்கு வருமோ என்ற பயம் மகாராஷ்டிராவில் வேலை பார்த்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதையடுத்து, மும்பையிலிருந்து தங்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு ஆயிரக்கணக்கானோர் தினமும் செல்ல தொடங்கியுள்ளனர். இதேபோல், டெல்லியில் வேலை பார்க்கும் வெளி மாநில தொழிலாளர்களும் புறப்பட்டு வருகிறார்கள்.இந்நிலை தமிழகத்தில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று இங்கு வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால், அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே, கொரோனா ஊரடங்கின்போது சொந்த மாநிலத்திற்கு சென்றவர்களில் பாதிப்பேர்தான் தமிழகம் திரும்பியுள்ளனர். இதனால், 50 முதல் 60 சதவீத தொழிலாளர்களைக் கொண்டுதான் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போதுள்ள நிலையில், இருப்பவர்களும் சென்றுவிட்டால் சிறு,குறு தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறு,குறு தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் பணியாளர்கள் பற்றாக்குறை வந்துவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் அன்புராஜன் கூறும்போது, ‘‘ஒருவேளை மீண்டும் ஊரடங்கு என்ற நிலை ஏற்பட்டால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடங்களிலேயே அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், உணவு, தங்குமிடம் ஆகியவற்றை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல நிறுவனங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன’’ என்றார்….

The post ஊரடங்கு அச்சத்தால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவது சிறு,குறு தொழிற்சாலைகளை கடுமையாக பாதிக்கும்: கொரோனா அதிகரிப்பால் மீண்டும் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: