ஊரக வளர்ச்சி துறையினர் மாவட்ட செயற்குழு கூட்டம்

 

சிவகங்கை, ஜூன் 23: சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் லூயிஸ்ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். சிவகங்கை உதவி இயக்குநர் (தணிக்கை) தொழிற் சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள், கார்த்திக், சேக்அப்துல்லா, பயாஸ் அகமது, சிவா, பழனிச்சாமி, குமரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் துணைத் தலைவர் தனபால் நன்றி கூறினார்.

The post ஊரக வளர்ச்சி துறையினர் மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: