ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்

சென்னை: தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது: வேளாண்மை என்பது உன்னதமான தொழில் என்கின்ற உணர்வை அனைவர் உள்ளங்களிலும் ஊட்டி, அதை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக அரசு முழுவதுமாக ஈடுபடும். அதன் மூலம் படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ‘ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, இந்த ஆண்டு 2,500 இளைஞர்களுக்கு ஒட்டுக்கட்டுதல், பதியன் போடுதல், கவாத்து செய்தல், பசுமைக் குடில் பராமரித்தல், நுண்ணீர்ப் பாசன அமைப்பு பராமரித்தல், தோட்டக்கலை இயந்திரங்கள் இயக்குதல், வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்குதல், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளைப் பழுது நீக்குதல் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படும். இத்திட்டம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்….

The post ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: