ஊட்டி அரசு பண்ணையில் ‘ஸ்ட்ராபெரி’ சாகுபடி தீவிரம்

ஊட்டி: ஊட்டியில் உள்ள நஞ்சநாடு தோட்டக்கலைத்துறை பண்ணையில் ஸ்ட்ராபெரி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் பல்வேறு காய்கறிகள், பழக்கள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தும்மனட்டி பண்ணை மற்றும் நஞ்சாடு பண்ணைகளில் பல்வேறு காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, நஞ்சநாடு பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் பழவியல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பழரசம் மற்றும் ஜாம் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, வெளியிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்ட்ராபெரி பழத்தோட்டத்திற்கு தினமும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்….

The post ஊட்டி அரசு பண்ணையில் ‘ஸ்ட்ராபெரி’ சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: