உடுமலை சைனிக் பள்ளியில் தென் மண்டல அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

உடுமலை, ஜூலை 2: உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சைனிக் பள்ளிகளின் தென் மண்டல கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக சைனிக் பள்ளி நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் தீபு கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா 2, கேரளா, ஆந்திரா என மொத்தம் 6 சைனிக் பள்ளிகள் பங்கேற்றன. ஜூனியர்ஸ் (9 முதல் 11ம் வகுப்பு வரை) மற்றும் சப்-ஜூனியர்ஸ் (6 முதல் 8ம் வகுப்பு வரை) பிரிவுகளுக்கு லீக் முறையில் போட்டி நடத்தப்பட்டது.

சைனிக் பள்ளிகள் தென் மண்டல சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது.ஜூனியர் பிரிவில், சைனிக் பள்ளி கழக்கூட்டம் (கேரளா) கோப்பையை வென்றது. சைனிக் பள்ளி கொருகொண்டா (ஆந்திரபிரதேசம்) இரண்டாம் இடத்தைப் பிடித்தது. சப் ஜூனியர் பிரிவில், சைனிக் பள்ளி அமராவதிநகர் (தமிழ்நாடு) கோப்பையை வென்றது. இரண்டாம் இடத்தை சைனிக் கொருகொண்டா (ஆந்திரபிரதேசம்) வென்றது. நிறைவு விழா சைனிக் பள்ளியின் முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை விருந்தினர் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். அமராவதிநகர் சைனிக் பள்ளியின் 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் வண்ணமயமான நடனங்களை நிகழ்த்தினர்.

The post உடுமலை சைனிக் பள்ளியில் தென் மண்டல அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: