ஈத்தாமொழி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல்

ஈத்தாமொழி, மே 14 : ஈத்தாமொழி அருகே நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (42) தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஐயப்பன் (48). இரு வீட்டாருக்கும் இடையே வழி பாதை சம்பந்தமாக ஏற்கனவே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஐயப்பன் அவரது நண்பர் மங்காவிளையை சேர்ந்த விஜயன் (32) என்பவருடன் சேர்ந்து வின்சென்ட் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் மற்றும் விஜயன் இருவரும் சேர்ந்து வின்சென்ட்டை தாக்கியுள்ளனர். அப்போது தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கி யுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சத்தம் போடவே கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து வின்சென்ட் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஈத்தாமொழி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: