சென்னை: அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி பெற 6, 7, 8ம் வகுப்பு படிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் விளையாட்டுத் துறையில் சாதிக்க உதவும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் 5 விடுதிகளை நடத்துகிறது. தங்குமிடம், நல்ல பயிற்சி, சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்்ளன.
இந்த விடுதிகளில் இப்போது காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் விளையாட்டுகளில் ஆர்வமும், திறமையும் உள்ள சிறுவர், சிறுமிகள் சேரலாம். டேக்வாண்டா, ஜிம்னாஸ்டிக்ஸ், மேசைப்பந்து, நீச்சல், தடகளம், இறகுப்பந்து , டென்னிஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் சேர்வதற்கான தேர்வு முகாம் ஜூலை 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!