இலவச தையல் பயிற்சி நிறைவு விழா

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சி 2வது வார்டு அரியன் வாயல் பகுதி உள்ளது. இங்கு உள்ள சிறுபான்மை பெண்கள் பலன் பெறும் வகையில் 6 மாத கால இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயற்சி எஸ்.ஆர்.டிஎஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வந்தது. இதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்று வந்தனர். இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எஸ்.ஆர்.டிஎஸ் அறக்கட்டளையின் நிர்வாகி அருட்சகோதரி அரசி தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் திமுக ரவி, மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் திமுக ருக்மணி மோகன்ராஜ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கினார். 2வது வார்டு உறுப்பினர் திமுக அபுபக்கர் நன்றி கூறினார்….

The post இலவச தையல் பயிற்சி நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: