கொழும்பு: ‘இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு முடிவிற்குள் சீராகும்’ என பட்ஜெட் தாக்கல் செய்து அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடியதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னமும் வெளிநாட்டு கடன் உதவியை இலங்கை நம்பி உள்ள நிலையில், வரும் 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், டிஜிட்டலை மையப்படுத்திய பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலையை குறைப்பது உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை. அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான அம்சங்களும், உலக மற்றும் ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவை மீண்டும் வலுப்படுத்துவது குறித்தும் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிபர் ரணில் தனது பட்ஜெட் உரையில், ‘‘சர்வதேச நாணய நிதியத்தால் கேட்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்பாட்டை எட்டுவதற்கு, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட கடனாளிகளுடன் இலங்கை அரசு பேசி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரம் சீராகும்’ என்று தெரிவித்தார்….
The post இலங்கை பொருளாதாரம் அடுத்த ஆண்டில் சீராகும்: பட்ஜெட் தாக்கலில் ரணில் உறுதி appeared first on Dinakaran.