இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.4.43 கோடி வைரம், ரத்தின கற்கள் பறிமுதல்: சென்னை தொழிலதிபரிடம் விசாரணை; வங்கி கணக்கு முடக்கம்

மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு பார்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம், ரத்தின கற்களை சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தொழிலதிபரின் வங்கி கணக்கை முடக்கி விசாரித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு பார்சல் சென்னையில் உள்ள ஒரு நகை கடையின் பெயரை குறிப்பிட்டு வந்தது. அதில் பெரிய அளவில் வைரம், ரத்தின கற்கள் கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு துறையிடம் இருந்து சென்னை விமான நிலைய சுங்க துறைக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே அதிகாரிகள், அந்த பார்சலை சோதனை செய்தனர். அதில் ரூ.5.85 லட்சம் மதிப்புடைய செமி வைரக்கற்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பார்சலை திறந்து சோதனையிட்டனர். அதில், 204 காரட் மற்றும் உயர்ரக ரத்தின கற்கள் இருந்தது தெரிந்தது. அவைகளின் மதிப்பு ரூ.4.43 கோடி. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இந்த பார்சலை இறக்குமதி செய்த தொழிலதிபரிடம் விசாரிக்க உள்ளனர். அதே நேரத்தில் அவரது வங்கி கணக்கையும், அதிலிருந்த ரூ.60 லட்சம் பணத்தையும்  முடக்கினர். அவரது நிறுவனத்தை சோதனையிட்டு ரூ.56 ஆயிரம் ரொக்கம் மற்றும் கணக்கு புத்தகங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.4.43 கோடி வைரம், ரத்தின கற்கள் பறிமுதல்: சென்னை தொழிலதிபரிடம் விசாரணை; வங்கி கணக்கு முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: