இருக்கு… ஆனா, இல்ல… இலையும் மாம்பழமும் புலம்பல்

வந்தவாசி(தனி) தொகுதியில, ஏற்கனவே கடந்த 2001ல் நடந்த பொதுதேர்தல்ல இலை கூட்டணியில மாம்பழம் போட்டியிட்டுச்சாம். அப்போ, மதுரையை சேர்ந்த க.முருகவேல்ராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோட சரி, அவரு, தொகுதி பக்கமே திரும்பிக்கூட பாக்கலையாம். இந்நிலையில, இலையோட கூட்டணியில மாம்பழத்துக்கு சீட் ஒதுக்கியிருக்காங்க. இந்த தொகுதியில உள்ளூர் மாம்பழ கட்சிக்காரங்க, வந்தவாசி தொகுதியைச் சேர்ந்த ஒருத்தருக்குத்தான் வாய்ப்பு வழங்கனும்னு கட்சி தலைமைக்கு கோரிக்கை வெச்சிருந்தாங்க. ஆனா, இந்த முறையும் உள்ளூர் பழக்கட்சிக்காரங்களுக்கு சீட் கொடுக்காம, பக்கத்து மாவட்டமான தர்மபுரியை சேர்ந்தவரான, பழக்கட்சியில மாணவர் சங்க மாநில செயலாளர் பதவியில இருக்கிற முரளி சங்கருக்கு சீட் கொடுத்திருக்காங்க.  இதனால உள்ளூர் மாம்பழ கட்சிக்காரங்க ரொம்ப அதிருப்தியில இருக்காங்களாம். தேர்தல் வேலையும் டல்லாத்தான் போகுதாம். அதோட, இலை கட்சியில மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் அண்ணபூரணி விஜய், வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தவாசி முனுசாமி, மாவட்ட துணை செயலாளர் விமலா மகேந்திரன் உட்பட 10 பேரும் சீட்டு கேட்டிருந்தாங்களாம். அவங்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.ஆக மொத்தத்துல வந்தவாசி தொகுதியில, இலை கட்சிக்கு சீட்டே இல்ல, மாம்பழத்துக்கு சீட்டு கொடுத்தும் பயனில்ல. இருக்கு, ஆனா இல்லன்ற சினிமா டயலாக்க சொல்லி, சொல்லியே இலையும், மாம்பழக்கட்சிக்காரங்களும் புலம்பி வர்றாங்களாம். …

The post இருக்கு… ஆனா, இல்ல… இலையும் மாம்பழமும் புலம்பல் appeared first on Dinakaran.

Related Stories: