தர்மபுரி, ஜூன் 2: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், தர்மபுரியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர், தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவி இன்ஸ்டாகிராம் காதலனுடன் தேனியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேனி சென்று, இருவரையும் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அறிவுரைகள் கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
The post இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய பள்ளி மாணவி மீட்பு appeared first on Dinakaran.
