இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, ஜூன் 20: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இன்று (20ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில், தனியார்துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூபர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், இன்று நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: